2026 ஏப்ரல் 06, திங்கட்கிழமை

இலங்கை - தென்ஆபிரிக்கா: நான்காம் நாள் நிறைவு

A.P.Mathan   / 2014 ஜூலை 27 , பி.ப. 03:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, தென் ஆபிரிக்கா அணிகளுக்கிடையில் நடைபெற்றுவரும் டெஸ்ட் போட்டியில் தென் ஆபிரிக்கா அணிக்கு 369 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை இலங்கை அணி நிர்ணயித்துள்ளது. தமது இரண்டாவது இன்னிங்சிற்காக துடுப்பாடிவரும் தென் ஆபிரிக்கா அணி இன்றையா நாள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 38 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. 
 
இலங்கை அணி தமது இரண்டாவது இன்னிங்சில் 8 விக்கெட் இழப்பிற்கு 229 ஓட்டங்களைப் பெற்று தமது துடுப்பாட்டத்தை இடை நிறுத்தியது. இதில் குமார் சங்ககார 72 ஓட்டங்களையும், அஞ்சலோ மத்தியூஸ் 63 ஓட்டங்களையும், உப்புல் தரங்க 30 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் மோர்னி மோர்க்கல் 4 விக்கெட்களையும், டேல் ஸ்டைன் 2 விக்கெட்களையும், இம்ரான் தாகிர் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 
 
முன்னதாக இலங்கை அணி இலங்கை அணி தமது முதல் இன்னிங்சில் 121.4 ஓவர்களை எதிர்கொண்டு சகல  விக்கெட்களையும்  இழந்து  421 ஓட்டங்களைப் பெற்றது. இதில் மஹேல ஜெயவர்தன  165 ஓட்டங்களையும், தனது அறிமுகப் போட்டியில் விளையாடிய நிரோஷன் டிக்வெல்ல 72 ஓட்டங்களையும், அஞ்சலோ மத்தியூஸ் 63 ஓட்டங்களையும் கௌஷால் சில்வா 44 ஓட்டங்களையும் பெற்றனர். . தென் ஆபிரிக்கா அணியின் பந்துவீச்சில் டேல் ஸ்டைன், JP டுமினி, வேர்ணன் பிலான்டர்  ஆகியோர் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளனர். 
 
தென் ஆபிரிக்கா முதல் இன்னிங்சில் சகல விக்கெட்களையும் இழந்து 134.5 ஓவர்களில் 282 ஓட்டங்களைப் பெற்றது. இதில் ஹாசிம் அம்லா ஆட்டமிழக்காமல் 139 ஓட்டங்களையும், பப் டு பிலேசிஸ் 36 ஓட்டங்களையும், பெற்றனர். சுரங்க லக்மால்,  5 விக்கெட்களையும், ரங்கன ஹேரத் 4 விக்கெட்களையும் பந்துவீச்சில் கைப்பற்றினர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .