2026 ஏப்ரல் 06, திங்கட்கிழமை

இங்கிலாந்து, இந்தியா டெஸ்ட் இரண்டாம் நாள் நிறைவு

A.P.Mathan   / 2014 ஜூலை 28 , பி.ப. 08:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் நிறைவில் துடுப்பாடி வரும் இந்தியா அணி 1 விக்கெட் இழப்பிற்கு 25 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. 
 
அன்டேர்சனின் பந்துவீச்சில் சிகார் தவான் ஆட்டமிழந்துள்ளார். இங்கிலாந்து அணி தமது முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 567 ஓட்டங்களைப் பெற்று தமது துடுப்பாட்டத்தை இடை நிறுத்தியது. இதில் இயன் பெல் 167 ஓட்டங்களையும், கரி பலன்ஸ் 156 ஓட்டங்களையும், அலஸ்டியர் குக் 95 ஓட்டங்களையும், தனது முதற்ப் போட்டியில் விளையாடும் ஜோஸ் பட்லர் 85 ஓட்டங்களையும் பெற்றனர். 
 
பந்துவீச்சில் புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்களையும், ரவீந்தர் ஜடேஜா 2 விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளனர். அழுத்தத்திற்குமத்தியில் இங்கிலாந்து அணி சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. இந்தியா துடுப்பாட்டத்தில் ஓட்டங்களை குவித்தால் போட்டி சமநிலையில் முடிவைடையும், மூன்றாம் நாளன இன்று இந்தப் போட்டியின் போக்கை தீர்மானிக்ககூடியதாக இருக்கும்.    
 
இங்கிலாந்து சொவ்தம்ப்டன் த ரோஸ் போல் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றுவருகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .