2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

ரவீந்தர் ஜடேஜா மீள் முறையீடு

A.P.Mathan   / 2014 ஜூலை 30 , பி.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய வீரர் ரவீந்தர் ஜடேஜா, ஜேம்ஸ் அன்டர்சன் மோதலில் இந்திய அணி வீரர் ரவீந்தர் ஜடேஜா தரம் 01 இற்கான குற்றத்தின் கீழ் போட்டி ஊதியத்தில் இருந்து 50 சதவீதத்தை அபராதமாக கட்ட வேண்டும் என போட்டி மத்தியஸ்தர் டேவிட் பூன் தீர்ப்பு வழங்கி இருந்தார். தரம் 01 இற்கான குற்றத்திற்கு மீள் முறையீடு செய்ய முடியாத போதும் இந்த சம்பவத்திற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைக்கு, சர்வதேசக் கிரிக்கெட் பேரவை அனுமதி வழங்கியுள்ளது. 
 
இங்கிலாந்து அணி முகாமைத்துவம் தரம் 02 இற்கான குற்றத்தை ஜடேஜா புரிந்துள்ளார் என முறையீடு செய்தது. இருப்பினும் போட்டி மத்தியஸ்தர் டேவிட் பூன் ஜடேஜா தரம் 01 இற்கான குற்றத்தையே புரிந்துள்ளார் என தீர்ப்பு வழங்கி இருந்தார். ஆனாலும் ஜடேஜா குற்றமே செய்யவில்லை என இந்திய கிரிக்கெட் கட்டுப்ப்பாட்டுச் சபை தெரிவித்தே இந்த மீள் முறையீட்டை கோரி இருந்தது. அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் முதலாம் திகதி ஜேம்ஸ் அன்டர்சனின் விசாரணை நடைபெறும் வேளையிலேயே ஜடேஜாவின் விசாரணையும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த விசாரணைக்கு ரவீந்தர் ஜடேஜா, இந்திய அணித் தலைவர் டோனி, பயிற்றுவிப்பாளர் டங்கன் பிலட்ச்சர், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் சட்ட ஆலோசகர் ஆகியோர் இந்தியா அணி சார்பாக கலந்து கொள்ளவுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .