2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

இங்கிலாந்துக்கு வெற்றி; தொடர் சமநிலையில்

A.P.Mathan   / 2014 ஜூலை 31 , பி.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 266 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு பின்னர் இங்கிலாந்து அணி முதல் டெஸ்ட் வெற்றியைப் பெற்றுள்ளது. 10 போட்டிகளின் பின்னர் முதல் வெற்றி இதுவாகும். இந்தப் 10 போட்டிகளில் 7 தோல்விகள் உள்ளடக்கம் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் அடங்கிய தொடரின் மூன்று போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் தொடர் 1 இற்கு 1 என சமநிலையில் உள்ளது.  
 
445 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் துடுப்பாடிய இந்தியா அணி 178 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கெட்களையும் இழந்தது. இதில் அஜிங்கையா ரெஹானே ஆட்டமிழக்காமல் 52 ஓட்டங்களையும் 
 
ஷிகார் தவான் 37 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். பந்துவீச்சில் மூயேன் அலி 6 விக்கெட்களையும்,  ஜேம்ஸ் அன்டர்சன் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 
 
தமது முதல் இன்னிங்சை இந்தியா அணி 330 ஓட்டங்களுடன் நிறைவு செய்தது. டோனி  50 ஓட்டங்களையும், அஜின்கையா ரெஹானே 54 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஜேம்ஸ் அன்டேர்சன் 5 விக்கட்களையும் ஸ்டுவோர்ட் ப்ரோட் 3 விக்கெட்களையும், மூயேன் அலி 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். இங்கிலாந்து அணி தமது இரண்டாம் இன்னிங்சில்  4 விக்கெட் இழப்பிற்கு 205 ஓட்டங்களைப் பெற்று தமது துடுப்பாட்டத்தை இடை நிறுத்தி இந்திய அணிக்கு 445 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நிர்ணயித்தது. இதில் அலிஸ்டயர் குக் ஆட்டமிழக்காமல் 75 ஓட்டங்களையும், ஜோ ரூட் 56 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ரவீந்தர் ஜடேஜா 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
  
இங்கிலாந்து அணி தமது முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 567 ஓட்டங்களைப் பெற்று தமது துடுப்பாட்டத்தை இடை நிறுத்தியது. இதில் இயன் பெல் 167 ஓட்டங்களையும், கரி பலன்ஸ் 156 ஓட்டங்களையும், அலஸ்டியர் குக் 95 ஓட்டங்களையும், தனது முதற்ப் போட்டியில் விளையாடும் ஜோஸ் பட்லர் 85 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்களையும், ரவீந்தர் ஜடேஜா 2 விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X