2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

கடித்த வீரருக்கு பயிற்சிகளுக்கு அனுமதி

A.P.Mathan   / 2014 ஓகஸ்ட் 15 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

உருகுவே கால்பந்தாட்ட வீரர் லூயிஸ் சொராஸ், பயிற்சிகளில் ஈடுபட விளையாட்டுக்கான மேல் முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சர்வதேசக் கால்பந்தாட்ட சம்மேளம், லூயிஸ் சொராஸ் 4 மாதங்களுக்கு கால்பந்தாட்டம் சம்மந்தமான எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபட முடியாது என தடை விதித்தது.  
 
உலகக்கிண்ண கால்பந்தாட்ட தொடரில் இத்தாலி வீரர் ஜிஜோர்ஜியா செலினி என்ற வீரரை போட்டியின் போது கடித்தமைக்காகவும், கடந்த காலங்களில் ஏற்கெனவே இரண்டு தடவைகள் இவ்வாறு எதிரணி வீரர்களை கடித்தமைக்காகவும் இவர் கால்பந்தாட்ட மைதானத்துக்குள் செல்ல முடியாதபடி தடை விதிக்கப்பட்டது. இதற்கு எதிராக சொராஸ், மேல் முறையீடு செய்தார். மேல் முறையீட்டை விசாரணை செய்த விளையாட்டுக்கான மேல் முறையீட்டு நீதிமன்றம், சொராஸ் விளையாடும் கழகமான பார்சில்னோ கழகத்துடன் இணைந்து பயிற்சிகளில் ஈடுபடவும், விளம்பரப்படுத்தல்களில் ஈடுபடவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .