2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

பார்சிலோனா கழகத்தின் வீரர்கள் பரிமாற்று தடை உறுதி

A.P.Mathan   / 2014 ஓகஸ்ட் 21 , மு.ப. 01:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேசக் கால்பந்தாட்ட சம்மேளனம், ஸ்பெயின் பார்சிலோன கழகத்தின் வீரர்கள் பரிமாற்று தடையை உறுதி செய்துள்ளது. வீரர்கள் பரிமாற்று விதியை பார்சிலோனோ கழகம் மீறியுள்ளது என்ற குற்றத்தின் அடிப்படையில் 2014ஆம் ஆண்டுக்கான பகுதி பரிமாற்றத்தையும், 2015ஆம் ஆண்டுக்கான பரிமாற்றத்தையும் தடை செய்தது. இந்த தடையை ரத்து செய்யக் கோரி பார்சிலோனோ கழகம் மீள் முறையீடு செய்தது. இருப்பினும் அதனை ஏற்க முடியாது என சர்வதேசக் கால்பந்தாட்ட சம்மேளனம் அறிவித்துள்ளது. 
 
இதன் மூலம் பாரிய பின்னடைவை பார்சிலோன கழகம் சந்திக்க நேரிடலாம். இந்த தடை மூலம் உலகின் சிறந்த வீரர்களில் ஒருவரான உருகுவே வீரர் லூயிஸ் சொரஸ் பார்சிலோனா கழகத்தில் இணைவதிலும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. லிவர் பூல் கழகத்தில் இருந்து பரிமாற்று முறையில் சொரஸ் பார்சிலோனா கழகத்தில் இணைய இருந்தார். இது உறுதி செய்யப்பட்ட போதும், ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவில்லை. சொரஸ் உலகக்கிண்ணத்தில் இத்தாலி வீரரை கடித்த குற்றத்திற்கு தடை செய்யப்பட்டுள்ள போதும் பயிற்சிகளில் விளையாட அண்மையில் அனுமதி வழங்கப்பட்டு பார்சிலோனா அணியுடன் அவர் பயிற்சிகளிலும் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .