2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

வெள்ளையடிப்பு செய்து தொடரைக் கைப்பற்றியது தென் ஆபிரிக்கா

A.P.Mathan   / 2014 ஓகஸ்ட் 22 , மு.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென் ஆபிரிக்கா, சிம்பாவே அணிகளுக்கிடையில் நடைபெற்ற மூன்றவாதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேசப் போட்டியில் தென் ஆபிரிக்கா அணி 7 விக்கெட்களினால் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் தென் ஆபிரிக்கா அணி  தொடரை 3 இற்கு 0 என்ற ரீதியில் வெள்ளையடிப்பு செய்து கைப்பற்றியுள்ளது. 
 
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய சிம்பாவே அணி 39.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 165 ஓட்டங்களைப் பெற்றது. இதில் எல்டன் சிக்கும்புரா 90 ஓட்டங்களையும், சிகாண்டர் ரசா 30 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் மார்ச்சன்ட் டி லங்க் 3 விக்கெட்களையும், கைல் அப்போட், வெய்ன் பார்னல் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளனர். 
 
பதிலுக்கு துடுப்பாடிய தென் ஆபிரிக்கா அணி 27.2 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 171 ஓட்டங்களைப் பெற்றது. இதில் குயின்டன் டி கொக் 84 ஓட்டங்களையும், பப் டு பிலேசிஸ் 40 ஓட்டங்களையும் பெற்றனர். போட்டியின் நாயகனாகவும், தொடர் நாயகனாகவும் குயின்டன் டி கொக் தெரிவானார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .