2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

பாகிஸ்தான் அணிக்கு வெற்றி

Thipaan   / 2014 ஓகஸ்ட் 24 , மு.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் நடைபெற்ற முதலவாது ஒரு நாள் சர்வதேசப் போட்டியில் பாகிஸ்தான் அணி டக் வேர்த் லூயிஸ் முறையில் 4 விக்கெட்களால் வெற்றி பெற்றது.

மழை காரணமக தாமதித்து ஆரம்பித்த இந்தப் போட்டியில் மீண்டும் மழை குறுக்கிட 45 ஓவர்கள் போட்டியாக போட்டி மாற்றப்பட்டது.

முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 45 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 275 ஓட்டங்களைப் பெற்றது. இதில் அஞ்சலோ மத்தியூஸ் 89 ஓட்டங்களையும், மஹேல ஜெயவர்தன 63 ஓட்டங்களையும், அஷான் பிரியரஞ்சன் ஆட்டமிழக்காமல் 39 ஓட்டங்களையும் பெற்றனர்.
பதுவீச்சில் வகாப் ரியாஸ் 3 விக்கெட்களையும், மொஹமட் இர்பான் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

275 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 1 பந்து மீதமிருக்க 6 விக்கெட்களை இழந்து வெற்றி பெற்றது.
இலங்கை அணிக்கு வெற்றி வாய்ப்புக்கள் இருந்த போதும் ஆறாது விக்கெட் இணைப்பாட்டமாக 147 ஓட்டங்களை பவாட் அலாம், சொஹைப் மக்சூட் ஆகியோர் பெற்று தம் பக்கம் வெற்றியை மாற்றினர்.

சொஹைப் மக்சூட் ஆட்டமிழக்காமல் 89 ஓட்டங்களையும், பவாட் அலாம் 62 ஓட்டங்களையும், அஹமட் செஷாட் 49 ஓட்டங்களையும் பெற்றனர்.
இலங்கை அணியின் பந்துவீச்சில் அஞ்சலோ மத்தியூஸ், திசர பெரேரா ஆகியோர் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர்.

போட்டியின் நாயகனாக சொஹைப் மக்சூட் தெரிவானார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் அடங்கிய தொடரில் பாகிஸ்தான் அணி 1 இற்கு 0 என முன்னிலை பெற்றுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .