2026 ஏப்ரல் 06, திங்கட்கிழமை

பாக். கிரிக்கெட் சபையின் பலமான பதவியில் முன்னாள் தலைவர் நஜீம்

Thipaan   / 2014 ஓகஸ்ட் 24 , பி.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் உயரிய நிர்வாக பதவியை முன்னாள் தலைவர் நஜீம் சேதி பெற்றுக் கொண்டுள்ளார்.

தலைவரின் கீழ் இயங்கும் மூன்று முக்கிய பதவிகளில் ஒன்றான கிரிக்கெட் விவகாரங்களுக்கான பிரதம நிறைவேற்று அதிகாரியாக சேதி நியமிக்கப்பட்டுள்ளார்.

நிறைவேற்றுக் குழுவில் பிரதம நிர்வாக அதிகாரி, பிரதம நிதி அதிகாரி ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த மூன்று அதிகாரிகளுமே முடிவுகளை எடுக்கும் அதிகாரங்களை கொண்டவர்கள்.

இறுதி முடிவை தீர்மானிக்கும் அதிகாரம் தலைவருக்கே உண்டு. நஜீம் சேதி கடந்த காலங்களில் சர்ச்சைக்குரிய பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர் பதவியில் மாறி மாறி இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .