2026 ஏப்ரல் 06, திங்கட்கிழமை

இந்தியா, இங்கிலாந்து ஒரு நாள் தொடர் நாளை ஆரம்பம்

Thipaan   / 2014 ஓகஸ்ட் 24 , பி.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஒரு நாள் சர்வதேசப் போட்டித் தொடர் நாளை (25) ஆரம்பமாகவுள்ளது. இங்கிலாந்து பிரிஸ்டல் மைதானத்தில் இலங்கை நேரப்படி மாலை 3 மணிக்கு இந்தப் போட்டி ஆரம்பமாகவுள்ளது.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இதுவரை 87 போட்டிகள் நடைபெற்றுள்ளன. இவற்றில் இங்கிலாந்து அணி 35 வெற்றிகளையும், இந்தியா அணி 47 வெற்றிகளையும் பெற்றுள்ளன. இரு போட்டிகள் சமநிலையில் நிறைவடைந்துள்ளன. 3 போட்டிகள் கைவிடப்பட்டன.
 
இங்கிலாந்தில் நடைபெற்றுள்ள 34 போட்டிகளில் இங்கிலாந்து அணி 18 வெற்றிகளையும்,  இந்திய அணி 12 வெற்றிகளையும் பெற்றுள்ளன ஒரு  போட்டி சமநிலையில் நிறைவடைந்தது. 3 போட்டிகள் கைவிடப்பட்டன.

டெஸ்ட் போட்டிகளில் மோசமான தொடர் தோல்வியை சந்த்தித்துள்ள இந்தியா அணி ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் சிறப்பான பெறுபேறுகளை காட்டி மீள் வருகையை காட்டும் என நம்பப்படுகின்றது.

இந்திய அணி ஒரு நாள் போட்டிகளில் பலமாக இருப்பதுடன் தரப்படுத்தல்களில் இரண்டாம் இடத்தில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .