2026 ஏப்ரல் 06, திங்கட்கிழமை

முதல் போட்டியில் தலைவராக வெற்றியைப் பெற்றுக் கொடுத்தார் நெய்மார்

A.P.Mathan   / 2014 செப்டெம்பர் 06 , பி.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரேசில் அணியின் தலைவராக பொறுப்பேற்று முதல் போட்டியிலேயே தனது அணிக்கான வெற்றியைப் பெற்றுக் கொடுத்துள்ளார் பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மார். பிரேசில், கொலம்பியா அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் பிரேசில் அணி 1 இற்கு 0 என வெற்றி பெற்றுள்ளது. நெய்மார் அடித்த கோல் மூலமே பிரேசில் அணி வெற்றி பெற்றது. 
 
பிரேசில் அணியின் தலைவர் தியாகோ சில்வா உலக்கிண்ண தொடரில் உபாதையடைந்து தொடர்ந்து விளையாட முடியாத நிலையில் அணியில் இருந்து விலகியுள்ளார். இந்த நிலையில் அணியின் தலைவராக 22 வயதான நெய்மார் அறிவிக்கப்பட்டுள்ளார். இள வயதானவர் என்றலும் நெய்மார் திறமையானவர். குறித்த பதவிக்கு ஏற்புடையவர் நெய்மார் என பிரேசில் அணியின் பயிற்றுவிப்பாளராக இரண்டாவது தடவையாக பொறுப்பேற்றுள்ள முன்னாள் தலைவர் டுங்கா தெரிவித்துள்ளார். 
 
ஆனால் நெய்மார் முழுமையான தலைவராக நியமிக்கப்பட்டுள்ளாரா இல்லையா என உத்தியோகபூர்வ அறிவித்தல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .