A.P.Mathan / 2014 செப்டெம்பர் 06 , பி.ப. 06:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிம்பாவேயில் நடைபெற்ற முக்கோண ஒருநாள்ப் போட்டித் தொடரில் அவுஸ்திரேலியா அணியை வெற்றி பெற்று தென் ஆபிரிக்கா அணி சம்பியன் பட்டத்தை தனதாக்கியுள்ளது. சிம்பாவே, ஹராரேயில் நடைபெற்ற போட்டியில் தென் ஆபிரிக்கா அணி 6 விக்கெட்களினால் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 217 ஓட்டங்களைப் பெற்றது. ஆரோன் பிஞ்ச் 54 ஓட்டங்களையும், ஜேம்ஸ் போல்க்னர் 39 ஓட்டங்களையும், மிச்சல் ஸ்டார்க் ஆட்டமிழக்காமல் 29 ஓட்டங்களையும் அவுஸ்திரேலியா அணியின் துடுப்பாட்டத்தில் பெற்றனர். பந்துவீச்சில் டேல் ஸ்டைன் 4 விக்கெட்களையும், வெய்ன் பார்னல், மோர்னி மோர்க்கல் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் தென் ஆபிரிக்கா அணியின் பந்துவீச்சில் கைப்பற்றினர். அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .