
அவுஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் ஐக்கிய அரபு ராட்சியத்தில் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடர், ஒருநாள்ப் போட்டித் தொடர், டுவென்டி டுவென்டி போட்டிகளுக்கான அவுஸ்திரேலியா அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பலமான முழுமையான அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மைக்கல் கிளார்க் உபாதையடைந்துள்ளார். அவர் இன்னும் குணமடையாத நிலையில் டெஸ்ட் மற்றும் ஒருநாள்ப் போட்டிகளுக்கு அணித்தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார். இன்னும் ஆறு வாரங்கள் மாத்திரம் இருக்கும் நிலையில் தசைப்பிடிப்பு உபாதை குணமடைந்து அணியின் தலைமைப் பொறுப்பை எடுத்துக்கொள்வார் என நம்பப்படுகின்றது.
டுவென்டி, டுவென்டி அணித்தலைவர் பொறுப்பில் இருந்து ஜோர்ஜ் பெய்லி விலகியுள்ள நிலையில் ஆரோன் பிஞ்ச் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஜோர்ஜ் பெய்லி உலகக்கிண்ண போட்டிகளுக்கு தன்னை தயார்ப்படுத்தவும், முதற் தர போட்டிகளில் விளையாடுவதன் மூலம் மீண்டும் டெஸ்ட் அணியில் இடம் பிடிக்கும் நோக்கிலும் தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.
சுழல்ப்பந்து வீச்சாளர் ஸ்டீப் ஓ கொபி, மிச்சல் ஸ்டார்க் ஆகியோர் டெஸ்ட் அணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளனர். அதிரடி வீரர் கிளன் மக்ஸ்வெல் டெஸ்ட் அணிக்குள் மீண்டும் உள்வாங்கப்பட்டுளார்.
அணி விபரம்
டெஸ்ட் -
டேவிட் வோர்னர், க்றிஸ் ரொஜெர்ஸ், அலெக்ஸ் டூலான், மைக்கல் கிளார்க், ஸ்டீபன் ஸ்மித், ஷேன் வோட்சன், பிலிப் கியூஸ், பிரட் ஹடின், கிளன் மக்ஸ்வெல், மிச்சல் மார்ஷ், மிச்சல் ஜோன்சன், ஸ்டீப் ஓ கொபி, பீட்டர் சிடில், மிச்சல் ஸ்டார்க், நேதன் லயோன்.
ஒருநாள் சர்வதேசப் போட்டி அணி -
டேவிட் வோர்னர், ஆரோன் பிஞ்ச்,மைக்கல் கிளார்க், ஸ்டீபன் ஸ்மித், ஷேன் வோட்சன், பிலிப் கியூஸ், ஜோர்ஜ் பெய்லி, பிரட் ஹடின், கிளன் மக்ஸ்வெல், மிச்சல் மார்ஷ், மிச்சல் ஜோன்சன், மிச்சல் ஸ்டார்க், நேதன் லயோன், ஜேம்ஸ் போல்க்னர், சீன் அப்போட்.
20-20 அணி -
டேவிட் வோர்னர், ஆரோன் பிஞ்ச்,ஸ்டீபன் ஸ்மித், ஷேன் வோட்சன், பிலிப் கியூஸ், பிரட் ஹடின், கிளன் மக்ஸ்வெல், மிச்சல் மார்ஷ், மிச்சல் ஜோன்சன், மிச்சல் ஸ்டார்க், ஜேம்ஸ் போல்க்னர், சீன் அப்போட், பட் கம்மின்ஸ், கேன் ரிச்சட்சன், கமரூன் பொய்ஸ்