2026 ஏப்ரல் 06, திங்கட்கிழமை

மும்பை இந்தியன்ஸ்அணியின் தலைவராகிறார் பொலார்ட்

George   / 2014 செப்டெம்பர் 12 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

சம்பியன்ஸ் லீக் போட்டிகளில் பங்குபற்றவுள்ள மும்பை இந்தியன்ஸ் அணிக்கு, கெரோன் பொலார்ட் தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவர் ரோஹித் ஷர்மா இங்கிலாந்தில் அடைந்த உபாதை காரணமாக தொடர்ந்து போட்டிகளில் பங்குபற்ற முடியாத நிலை ஏற்பட்டது.

அவர் இன்னமும் குணமடையாத நிலையில் கெரோன் பொலார்ட் அணித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தலைமை தாங்கும் ஐந்தாவது தலைவர் கெரோன் பொலார்ட் என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பியன்ஸ் லீக் தொடரின் தெரிவுப் போட்டிகள் நாளை இந்தியாவில் ஆரம்பிக்கின்றன.

நாளைய இரண்டாவது போட்டியில் இந்தியாவின் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் பாக்கிஸ்தானின் லாகூர் லயன்ஸ் அணி மோதவுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .