2026 ஏப்ரல் 06, திங்கட்கிழமை

நோர்தன் நைட்ஸ், லாகூர் லயன்ஸ் அணிகள் தகுதி

A.P.Mathan   / 2014 செப்டெம்பர் 17 , மு.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

சம்பியன்ஸ் லீக் தொடரின் இறுதிசுற்றில் விளையாட நோர்தன் நைட்ஸ், லாகூர் லயன்ஸ் அணிகள் தகுதி பெற்றுள்ளன. நேற்றைய தினம் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றதன் மூலம் இரு அணிகளும் தெரிவாகியுள்ளன. 
 
சதேர்ன் எக்ஸ்பிரஸ், லாகூர் லயன்ஸ் அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் லாகூர் லயன்ஸ் அணி 55 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது. முதலில் துடுப்பாடிய லாகூர் லயன்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 164 ஓட்டங்களைப் பெற்றது. இதில் மொஹமட் ஹபீஸ் 67 ஓட்டங்களையும், சாட் நசீம் 31 ஓட்டங்களையும் பெற்றனர். பர்வீஸ்  மஹ்ரூப் பந்துவீச்சில் 3 விக்கெட்களைக் கைப்பற்றினார். பதிலுக்கு துடுப்பாடிய சதேர்ன் எக்ஸ்பிரஸ் அணி 18 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 109 ஓட்டங்களைப் பெற்றது. இதில் ஜெகன் முபாரக் 35 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். ஐஷாஸ் சீமா 3 விக்கெட்களைக் கைப்பற்றினார். 
 
மும்பை, இந்தியன்ஸ், நோர்தன் நைட்ஸ் அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் 6 விக்கெட்களினால் நோர்தன் நைட்ஸ் அணி வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 132 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. இதில் கெரோன் பொலார்ட் 31 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். பந்துவீச்சில் ரிம் சௌதி 3 விக்கெட்களைக் கைப்பற்றிக் கொண்டார். பதிலுக்கு துடுப்பாடிய நோர்தன் நைட்ஸ் அணி 17.2 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 133 ஓட்டங்களைப் பெற்றது. இதில் கேன் வில்லியம்சன் 53 ஓட்டங்களையும்,  அன்டன் டெவிச் 39 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஜஸ்பிரிட் பும்ரா 3 விக்கெட்களைக் கைப்பற்றிக் கொண்டார்.
 
நான்கு அணிகள் மோதிய தெரிவுத் தொடரில் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் முதலிடத்தை நோர்தன் நைட்ஸ் அணி பெற்றுக் கொண்டது. லாகூர் லயன்ஸ் அணி இரு வெற்றிகளைப் பெற்று 8 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தைப் பெற்றது. மும்பை இந்தியன்ஸ் ஒரு வெற்றியைப் பெற்று 4 புள்ளிகளுடன் மூன்றமிடத்தைப் பெற்றுக் கொண்டது. சதேர்ன் எக்ஸ்பிரஸ் அணி சகல போட்டிகளிலும் தோல்வியை தழுவியது. முதலிரு இடங்களைப் பெற்ற அணிகள் அடுத்த சுற்றுக்கு தெரிவாகியுள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .