2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

ஹோபார்ட் கியுரிகன்ஸ், கொல்கொத்தா நைட் ரைடேர்ஸ் அணிகள் வெற்றி

A.P.Mathan   / 2014 செப்டெம்பர் 22 , மு.ப. 02:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

சம்பியன் லீக் கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டிகளில் ஹோபார்ட் கியுரிகன்ஸ் அணி மற்றும் கொல்கொத்தா நைட் ரைடேர்ஸ் அணிகள் வெற்றி பெற்றுள்ளன. 
 
முதற்ப் போட்டி கேப் கோப்ராஸ் மற்றும் ஹோபார்ட் கியுரிகன்ஸ் அணிகளுக்கிடையில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய கேப் கோப்ராஸ் அணி 2 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 186 ஓட்டங்களைப் பெற்றது. இதில் ரிச்சர்ட் லெவி 42 ஓட்டங்களையும், வேர்ணன் பிலாண்டர் 32 ஓட்டங்களையும் பெற்றனர். பென் ஹில்பன்கோஸ், பென் லோலின் ஆகியோர் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பாடிய ஹோபார்ட் கியுரிகன்ஸ் அணி 19 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 186 ஓட்டங்களைப் பெற்று 6 விக்கெட்களினால் வெற்றி பெற்றது. இதில் ஐடென் பிலிசார்ட் ஆட்டமிழக்காமல் 78 ஓட்டங்களையும், பென் டங் 54 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில்  சைபிரான்ட் எஞ்சல்ப்ரெச்ட் 3 விக்கெட்களைக் கைப்பற்றினார். 
 
இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பாடிய லாகூர் லயன்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 151 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இதில் அகமட் செஸாட் 59 ஓட்டங்களையும், உமர் அக்மல் 40 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் சுனில் நரையன் 4 ஓவர்களில் 9 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார். பதிலுக்கு துடுப்பாடிய கொல்கொத்தா நைட்ரைடேர்ஸ் அணி 19.3 ஓவர்களில் 153 ஓட்டங்களைப் பெற்று 5 விக்கெட்களினால் வெற்றி பெற்றது. இதில் கெளதம் கம்பீர் 60 ஓட்டங்களையும், ரொபின் ஊத்தப்பா 46 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஐசாஸ் சீமா 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .