2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

ஆசிய விளையாட்டுப் போட்டியின் மூன்றாம் நாளில் தென் கொரியா முதலிடம்

A.P.Mathan   / 2014 செப்டெம்பர் 22 , மு.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆசிய விளையாட்டுப் போட்டி தொடரில் போட்டிகளை நடாத்தும் தென் கொரியா மூன்றாம் நாளான நேற்று, முதலிடத்தை இழந்த போதும் நாள் நிறைவில் மீண்டும் இழந்த  இடத்தைப்  பெற்றுள்ளது. 
 
தென் கொரியா 12 தங்கப்பதக்கங்களுடன் முதலிடத்தைப் பெற்றுள்ளது. 10 வெள்ளிப் பதக்கங்களையும் 09 வெண்கலப் பதக்கங்களையும் தென் கொரியா பெற்றுள்ளது. மொத்தம் 31 பதக்கங்களைப் பெற்றுள்ளது. சீனா 12 தங்கம், 09 வெள்ளி, 11 வெண்கலம் அடங்கலாக 32 பதக்கங்களைப் பெற்றுள்ளது. 26 பதக்கங்களைப் பெற்று ஜப்பான் மூன்றாமிடத்தைப் பெற்றுள்ளது. 7 தங்கம், 8 வெள்ளி, 11 வெண்கலம் அடங்கலாக  ஜப்பான் இந்தப் பதக்கங்களைப் பெற்றுள்ளது. மொங்கோலியா 8 பதக்கங்களுடன் நான்கமிடத்தையும், கசகஸ்தான் 8 பதக்கங்களுடன் ஐந்தாமிடத்தையும் பெற்றுள்ளன. தொடர்ந்து வரும் இடங்களை வியட்நாம், சைனிஸ் தாய்பேய், வட கொரியா, இந்தியா, மலேசியா ஆகிய நாடுகள் பெற்றுள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .