2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

சென்னை சுப்பர் கிங்ஸ் அணி வெற்றி

A.P.Mathan   / 2014 செப்டெம்பர் 23 , மு.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

சம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ், டொல்பின் அணிகளுக்கிடையிலான போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 54 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது. 
 
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 242 ஓட்டங்களைப் பெற்றது. இதில் சுரேஷ் ரெய்னா  90 ஓட்டங்களையும், பிரன்டன் மக்கலம்  49 ஓட்டங்களையும், ரவீந்தர் ஜடேஜா ஆட்டமிழக்காமல் 40 ஓட்டனகளையும்  பெற்றனர். ரொபி பிரைலிங்க் 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். பதிலுக்கு துடுப்பாடிய டொல்பின்  அணி 20 ஓவர்களில் சகல  விக்கெட்களையும்  இழந்து 188 ஓட்டங்களைப் பெற்றது.  இதில் கோடி செட்டி 38 ஓட்டங்களையும், கமரூன்  டெல்பெர்ட் 34 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில்  மோஹித் ஷர்மா 4 விக்கெட்களையும், ஆஷிஸ் நெஹ்ரா, டுவைன் ப்ராவோ ஆகியோயர்  தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். போட்டியின் நாயகனாக சுரேஷ் ரெய்னா தெரிவு செய்யப்பட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .