2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

அவுஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

George   / 2014 நவம்பர் 10 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


இந்திய - அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடருக்கான அணி வீரர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதன்படி 19 பேர் கொண்ட இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை, இன்று திங்கட்கிழமை(10) அறிவித்தது.

டோணி (அணித்தலைவர்), கோலி, தவான், விஜய், ராகுல், புஜாரா, ரகானே, ரோகித் சர்மா, ரெய்னா, சாகா, நமன் ஓஜா, அஸ்வின், கரண் சர்மா, ஜடேஜா, புவனேஸ்வர் குமார், சமி, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், வருண் ஆரோன் ஆகியோர்  டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளனர்.

இதேவேளை, முதல் டெஸ்ட் போட்டியில் டோணி பங்கேற்க மாட்டார் என்றும் 2ஆவது டெஸ்ட் போட்டியின் போது அவர் அணிக்கு திரும்புவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த துடுப்பாட்ட வீரர் கே.எல். ராகுல், இடது கை சுழற்பந்து வீச்சாளர் கரண் சர்மா மற்றும் அதிரடி ஆட்டக்காரர் சுரேஷ் ரெய்னா ஆகியோருக்கு அணியில் இடம் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .