2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

அசத்தும் பாகிஸ்தான்

A.P.Mathan   / 2014 நவம்பர் 10 , பி.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கிடையில் ஐக்கிய அரபு ராஜ்சியத்தில் நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி அபாரமான துடுப்பாட்ட பெறுதியைக் காட்டியுள்ளது. 
 
அவுஸ்திரேலியா அணியுடன் துடுப்பாட்ட திறைமைகளைக் காட்டிய மிஸ்பா உல் ஹக், யூனுஸ் கான், ஆஷார் அலி, அஹெமட் ஷெஷாட் ஆகியோர் இந்தப் போட்டியிலும் ஓட்டங்களை குவித்துள்ளனர். 
 
பாகிஸ்தான் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 566 ஓட்டங்களை பெற்று தமது துடுப்பாட்டத்தை இடைநிறுத்தியது. இதில் அஹெமட் ஷெஷாட் 176 ஓட்டங்களையும், யூனுஸ் கான் ஆட்டமிழக்காமல் 100 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். கடந்த 5 இன்னிங்சில் பெற்ற நான்காவது சதமாக இது அமைந்துள்ளது. மிஸ்பா உல் ஹக் தொடர்ச்சியான மூன்றாவது சதத்தைப் பெற்றுக் கொண்டார். அவர் ஆட்டமிழக்காமல்  102 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். மொஹமட் ஹபீஸ் 92 ஓட்டங்களையும், ஆஷார் அலி 87 ஓட்டங்களையும் பெற்றனர். 
 
பந்துவீச்சில் கூரே அன்டர்சன் 2 விக்கெட்களைக் கைப்பற்றினர். தமது முதல் இன்னிங்சிற்காக துடுபாடி வரும் நியூசிலாந்து அணி 15 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .