2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி சமநிலையில்

A.P.Mathan   / 2014 நவம்பர் 22 , பி.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளுக்கிடையில் நடைபெற்றும் வரும் 3 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி சமநிலையில் நிறைவடைந்துள்ளது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய நியூசிலாந்து அணி சகல விக்கெட்களையும் இழந்து 403 ஓட்டங்களைப் பெற்றது. இதில் ரொம் லதாம் 137 ஓட்டங்களையும், மார்க் க்ரேக், பிரன்டன் மக்கலம் ஆகியோர் தலா 43 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்கள். 
 
பந்துவீச்சில் சுல்பிகார் பாபர் 4 விக்கெட்களையும், ஏஷான் ஆதில், யசீர் ஷா ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் சகல விக்கெட்களையும் இழந்து 393 ஓட்டங்களைப் பெற்றது. இதில் சப்ராஸ் அஹமட் 112 ஓட்டங்களையும், ஆஷர் அலி 75 ஓட்டங்களையும், யூனுஸ் கான் 74 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ரிம் சௌதி 3 விக்கெட்களையும், ரென்ட் போல்ட், ஐஸ் சோதி ஆகியோர் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர். 
 
நியூசிலாந்து அணி இரண்டாம் இன்னிங்சில் 9 விக்கெட்களை இழந்து 250 ஓட்டங்களைப் பெற்றது. இதில் ரொஸ் ரெய்லர் 104 ஓட்டங்களையும், பிரன்டன் மக்கலம் 45 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் யசீர் ஷா 5 விக்கெட்களையும், சுல்பிகர் பாபர் 4 விக்கெட்களையும் கைப்பற்றினர். 261 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு  196 ஓட்டங்களைப் பெற்றது. இதில் யூனுஸ் கான் 44 ஓட்டங்களையும், ஷான் மசூட் 40 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ரிம் சௌதி, மார்க் க்ரேக் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். போட்டியின் நாயகனாக ரொஸ் ரெய்லர் தெரிவானார். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .