2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

ஆஸிக்கு தொடர் வெற்றி; முதலிடம்

A.P.Mathan   / 2014 நவம்பர் 23 , பி.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையில் நடைபெற்ற ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் 4 இற்கு 0 என அவுஸ்திரேலியா அணி வெற்றி பெற்றுள்ளது. சிட்னியில் நடைபெற்ற ஐந்தாவதும் இறுதியுமான போட்டியில் டக் வேர்த் லூயிஸ் முறைப்படி 2 விக்கெட்களினால் வெற்றி பெற்றது. 
 
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய தென் ஆபிரிக்கா அணி 6 விக்கெட்களை இழந்து 280 ஓட்டங்களைப் பெற்றது. இதில் குயின்டன் டி கொக் 107 ஓட்டங்களையும், பர்ஹான் பெஹர்டீன் 68 ஓட்டங்களையும், றிலீ ரொசொவ் 51 ஓட்டங்களையும் பெற்றனர். பதிலுக்கு அவுஸ்திரேலியா அணி துடுப்பாடிய வேளையில் மழை குறுக்கிட்டமையினால்  டக் வேர்த் லூயிஸ் முறைப்படி 48 ஓவர்களில் 275 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 
 
47.1 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து அவுஸ்திரேலியா அணி வெற்றி இலக்கைப் பெற்றது. இதில் ஷேன் வொட்சன் 82 ஓட்டங்களையும், ஆரோன் பிஞ்ச் 76 ஓட்டங்களையும், ஸ்டீபன் ஸ்மித் 67 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ரொபின் பீற்றர்சன் 4 விக்கெட்களையும், மோர்னி மோர்க்கல் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். போட்டியின் நாயகனாக குயின்டன் டி கொக் தெரிவான அதேவேளை போட்டித் தொடர் நாயகனாக ஸ்டீபன் ஸ்மித் தெரிவானார். 
 
இந்த வெற்றியின் மூலம் 117 புள்ளிகளைப் பெற்று அவுஸ்திரேலியா அணி முதலிடத்தைப் பெற்றுள்ளது. இந்தியா அணி 117 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தைப் பெற்றுள்ளது. தென் ஆபிரிக்கா அணி 112 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தையும், 108 புள்ளிகளுடன் இலங்கை அணி நான்காமிடத்தையும் பெற்றுள்ளன. 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .