2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

இலங்கைக்கு வெற்றி

A.P.Mathan   / 2014 நவம்பர் 29 , பி.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கிடையில் நடைபெற்று வரும் ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் இரண்டாவது போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட்களினால் வெற்றி பெற்று 7 போட்டிகள் அடங்கிய தொடரில் 2 இற்கு 0 என்ற நிலையில் முன்னிலையிலுள்ளது. கொழும்பு R.பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டி மழை காரணமாக 45 ஓவர்கள் கொண்ட போட்டியாக மாற்றப்பட்டது. 
 
முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணி 43 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 185 ஓட்டங்களைப் பெற்றது. இதில் ரவி போபரா 51 ஓட்டங்களையும், ஜோ ரூட் 41 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் அஜந்த மென்டிஸ் 3 விக்கெட்களையும், திலகரட்ன டில்ஷான், தம்மிக்க பிரசாத் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 
 
பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி 34.2 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 186 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றது. இதில் மஹேல ஜெயவர்தன 77 ஓட்டங்களையும், குமார் சங்ககார 67 ஓட்டங்களையும் பெற்றனர். இவர்கள் இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட் இணைப்பாட்டமாக 149 ஓட்டங்களைப் பெற்றனர். போட்டியின் நாயகனாக மஹேல ஜெயவர்தன தெரிவு செய்யப்பட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .