2026 ஏப்ரல் 06, திங்கட்கிழமை

உலகக்கிண்ணத்தில் விளையாடுவேன்: கிளார்க்

A.P.Mathan   / 2014 டிசெம்பர் 25 , மு.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

சத்திர சிகிச்சை செய்துள்ள மைக்கல் கிளார்க், தான் உலகக்கிண்ண தொடரில் விளையாட உடற் தகுதி பெற்றுவிடுவேன் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அவுஸ்திரேலியா பத்திரிகையில் அவர் எழுதிவரும் பத்தியில் இதனை தெரிவித்துள்ளார். 

இந்தியா அணியுடனான முதற் டெஸ்ட் போட்டியில் தசைப் பிடிப்பு ஏற்பட்டத்தை அடுத்து, தொடரில் இருந்து விலகி சத்திர சிகிச்சை மேற்கொண்டார். அப்போது தன்னால் இனி கிரிக்கெட் விளையாட முடியும் என்று தான் நம்பவில்லை எனவும், அந்த போட்டியே தன் கடைசிப் போட்டியாக அமைய வாய்ப்புக்கள் உள்ளதாகவும் மைக்கல் கிளார்க் தெரிவித்து இருந்தார். இருப்பினும், தனது காயம் சிறப்பாக குணமடைந்து வருவதாகவும், தான் நடக்கும் போது எந்த வலிகளையும் உணரவில்லை எனவும், எனவே மிக விரைவில் தன் காயம் சுகமடைந்து விடும் எனவும், தன்னால் உலகக்கிண்ண தொடரில் விளையாட முடியும் எனவும் கிளார்க் கூறியுள்ளார். 

இந்த நிலையில் நாளை ஆரம்பிக்கவுள்ள இந்தியா - அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் நேர்முக வர்ணனையாளராக மைக்கல் கிளார்க் செயற்படவுள்ளார். இது ஒரு வித்தியாசமான அனுபவமாக தனுக்கு அமையவுள்ளது என கூறியுள்ள கிளார்க், வீரர்களுடன் இருந்து போட்டியை பார்பதை விட, வர்ணனை அறையில் இருந்து பார்ப்பது வித்தியாசமாக இருக்கும் எனவும் கூறியுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .