2026 ஏப்ரல் 06, திங்கட்கிழமை

பார்வையாளரை அறைந்தார் யூஸுப் பதான்

A.P.Mathan   / 2014 டிசெம்பர் 25 , மு.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கிண்ணத் தொடரில், பரோடா - ஜம்மு மற்றும் காஸ்மீர் அணிகளுக்கிடையிலான போட்டியின் போது பரோடா அணிக்காக விளையாடி வரும் யூஸுப் பதான், பார்வையாளர் ஒருவரை, வீரர்கள் அறைக்கு அழைத்து கன்னத்தில் இரு தடவை அறைந்துள்ளார். இதை அறிந்த யூஸுப் பதானின் சகோதரர் இர்பான் பதான் தலையிட்டு இந்த சம்பவத்தை சுமூகமாக முடிவுக்கு கொண்டு வந்தார்.

இரு அணிகளுக்குமான போட்டியின் போது, போட்டியை பார்த்துக் கொண்டு இருந்த ஒரு இள வயது பார்வையாளர், பரோடா அணி வீரர்களையும், யூஸுப் பதானையும் கேலியாகவும், மோசமான வார்த்தைகள் மூலமாகவும் கத்தி கூச்சலிட்டுள்ளார். யூஸுப் பதான் துடுப்பாடும் வேளையிலும் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது. இவற்றை சகிக்க முடியாமல் கோபமடைந்த யூஸுப் பதான், ஆட்டமிழந்து வெளியேறிய பின், குறித்த பார்வையாளரை வீரர்களின் அறைக்கு அழைத்து அறைந்துள்ளார். குறித்த பார்வையாளரின் உறவினர் மைதானத்துக்கு வந்து மன்னிப்பு கோரியதையடுத்து இந்த சம்பவம் சுமூகமாக முடிவுக்கு வந்தது என பரோடா கிரிக்கெட் சம்மேளனத்தின் செயலாளர் தெரிவித்துள்ள போதும், போட்டி மத்தியஸ்தர் இந்த சம்பவம் தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைக்கு அறிவித்துள்ளதாகவும் இறுதி முடிவு அவர்களின் கையில் எனவும் தெரிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .