2026 ஏப்ரல் 06, திங்கட்கிழமை

வலுவான நிலையில் இந்தியா

A.P.Mathan   / 2014 டிசெம்பர் 28 , மு.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய - அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டித் தொடரின் மூன்றாவது போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட முடிவின்போது இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 462 ஓட்டங்களை பெற்றுள்ளது. 

முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, சகல விக்கெட்டுகளையும் இழந்து 530 ஓட்டங்களைக் குவித்திருந்தது. அவுஸ்திரேலிய அணி சார்பில் அணித் தலைவர் ஸ்டீவன் ஸ்மித், 192 ஓட்டங்களைப் பெற்று உமேஸ் ஜாதேவின் பந்து வீச்சில் போல்ட் செய்யப்பட்டார்.

இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் சார்பில் மொஹமட் ஷமி 4 விக்கெட்டுகளையும் உமேஸ் ஜாதேவ் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இந்நிலையில், பதிலுக்கு துடுப்பாடிவரும் இந்திய அணி - விராத் கோளி மற்றும் அஜிங்கியா ரஹானே ஆகியோரின் சிறப்பான துடுப்பாட்டம் காரணமாக ஸ்திரத் தன்மையை அடைந்துள்ளது. விராத் கோளி 169 ஓட்டங்களையும் அஜிங்கியா ரஹானே 147 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர்.

அவுஸ்திரேலிய அணியின் பந்து வீச்சாளர்கள் சார்பில் ரெயான் ஹரிஸ் 4 விக்கெட்டுகளையும் நதன் லியோன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர். மிச்சல் ஜோன்ஸன், ஷேன் வட்சன் ஆகியோர் தலா 1 விக்கெட்டினைக் கைப்பற்றியுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .