2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

டெஸ்டில் இருந்து டோனி உடனடி ஓய்வு

Thipaan   / 2014 டிசெம்பர் 30 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய அணியின் தலைவர் மஹேந்திர சிங் டோனி டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தது ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இந்திய அணி அவுஸ்திரேலியா தொடரில் மூன்றாவது போட்டியை சமநிலையில் நிறைவு செய்ததை தொடர்ந்து இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

உலகக் கிண்ண தொடருக்கு பின்னர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார் என்ற எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில் டெஸ்ட் போட்டிகளில் தலைவராக மிக மோசமான முடிவுகளை அவர் பெற்றுக் கொடுத்துள்ளார்.

இந்த தொடர் இந்தியாவுக்கு எதிராக அமைந்தால் டோனி ஓய்வு பெறுவார் அல்லது நீக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்புக்கள் இருந்தன.
இந்த நிலையில் இந்திய அணி இந்த தொடரில் தோல்வியடைந்துள்ளமையும் அவரின் துடுப்பாட்டம் மோசமாக அமைந்தமையும் அவரின் ஓய்வுக்கு காரணம் என நம்பப்படுகின்றது.

விராத் கோலி முதற் போட்டியில் சிறப்பாக அணித்தலைவராக செயற்பட்டமை அவருக்கு தலைவர் பதவியை வழங்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த வருடத்தில் இந்திய அணி விளையாடிய 10 டெஸ்ட் போட்டிகளில் ஒரு வெற்றியை மாத்திரமே பெற்றது. 6 போட்டிகளில் தோல்வியை பெற்றுள்ள அதேவேளை 3 போட்டிகளில் சமநிலை முடிவைப் பெற்றுள்ளன.

33 வயதைப் பூர்த்தி செய்துள்ள டோனி 90 டெஸ்ட் போட்டிகளில் 6 சதங்கள் அடங்கலாக 4876 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். 256 பிடிகள், 38 ஸ்டம்புகள் அடங்கலாக 294 ஆட்டமிழப்புக்களை செய்துள்ளார்.

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .