2026 ஏப்ரல் 06, திங்கட்கிழமை

உலகக்கிண்ண பங்களாதேஷ் அணி

A.P.Mathan   / 2015 ஜனவரி 05 , மு.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகக் கிண்ணத்தில் விளையாடவுள்ள பங்காளதேஷ் கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் தெரிவுக்குழு இந்த அணியை தெரிவு செய்து அறிவித்துள்ளது. 

சகலதுறை வீரரான சௌமியா சர்கார், புதிய வீரராக அணிக்குள் இணைக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த மாதம் சிம்பாவே அணியுடன் நடைபெற்ற ஐந்தாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் தனது அறிமுகத்தை மேற்கொண்டார். நசிர் ஹொசைன், டஸ்கின் அஹமட் ஆகியோர் சிம்பாவே தொடரில் விளையாடாத வீரர்கள் இந்த அணியில் இணைக்கப்பட்டுள்ளனர். அணித் தலைவர் யார் என்பதை இன்னமும் அறிவிக்கவில்லை. மஸ்ரபி மோர்த்தாசா தலைவராகவும் சகிப் அல்-ஹசன் உப தலைவராகவும் அறிவிக்கப்படுவர் என நம்பப்படுகின்றது. 

அணியை தெரிவு செய்யும் போது உலகக் கிண்ணத்தை வெல்ல வேண்டும் என்ற நினைப்பிலேயே தெரிவு செய்வோம். ஆனாலும் நடைமுறை சாத்தியம் என்று ஒன்று உள்ளது. அதன்படி பங்களாதேஷ் அணியிலும் பார்க்க பலம் குறைந்த அணிகளான ஆப்கானிஸ்தான், ஸ்கொட்லாந்து அணிகளை வெற்றி பெறவேண்டும். அத்துடன் நியூசிலாந்து, இலங்கை, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளில் ஏதாவது ஒன்றையாவது வெல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பே உள்ளது. முடிந்தால் இரண்டாம் சுற்றுக்கு தெரிவாக வேண்டும் என்ற குறிக்கோளுடனேயே இந்த அணியை தெரிவு செய்துள்ளோம் என தெரிவுக்குழுவின் தலைவர் பரூக் அஹமட் தெரிவித்துள்ளார். 

அணி விபரம் 
தமிம் இக்பால், அனாமல் ஹக், சௌமியா சர்கார், மொமியுனல் ஹக், சகிப் அல் ஹசன், முஸ்பிகீர் ரஹீம், மஹமதுல்லா, நசீர் ஹொசைன், சபீர் அஹமட், மஷ்ரபீ மோர்தாசா, தஸ்கின் அஹமட், அல் அமின் ஹொசைன், ரூபல் ஹொசைன், அரபாத் சன்னி, டைஜுல் இஸ்லாம் 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .