2026 ஏப்ரல் 06, திங்கட்கிழமை

இலங்கை அணிக்கு தோல்வி

A.P.Mathan   / 2015 ஜனவரி 12 , மு.ப. 08:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கிடையில் நேற்று நடைபெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றியீட்டியது. நியூசிலாந்து க்றிஸ்சேர்ச் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 9 விக்கட்களை இழந்து 218 ஓட்டங்களைப் பெற்றது. இதில் மஹேல ஜெயவர்தன 104 ஓட்டங்களையும், லஹிறு திரிமான்னே, ஜீவன் மென்டிஸ் ஆகியோர் தலா 23 ஓட்டங்களைப் பெற்றனர். 

பந்துவீச்சில் நியூசிலாந்து அணி சார்பாக மிச்சல் மக்கிலனகன் 4 விக்கெட்களையும், அடம் மில்னே 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 

பதிலுக்கு துடுப்பாடிய நியூசிலாந்து அணி, 43 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 119 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றது. இதில் கூரே அன்டர்சன் 81 ஓட்டங்களையும், பிரன்டன் மக்கலம் 51 ஓட்டங்களையும் பெற்றனர். 

இலங்கை அணியின் பந்துவீச்சில் நுவான் குலசேகர, திலகரட்ன டில்ஷான், சசித்திர சேனநாயக்க ஆகியோர் தலா 2 விக்கட்களை கைப்பற்றினர். போட்டியின் நாயகனாக கூரே அன்டர்சன் தெரிவானார். 

இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி 7 போட்டிகள் அடங்கிய தொடரில் 1 இற்கு 0 என முன்னிலை பெற்றுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .