2026 ஏப்ரல் 06, திங்கட்கிழமை

அசத்தியது அவுஸ்திரேலியா

A.P.Mathan   / 2015 ஜனவரி 18 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

முத்தரப்பு ஒருநாள்போட்டித் தொடரின் 2ஆவது போட்டியான, இந்தியா - அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையே நடந்த போட்டியில், அவுஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. 

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி, முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்து, 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 267 ஓட்டங்களைப் பெற்றது. இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் ரோஹித் சர்மா, அபாரமாக துடுப்பெடுத்தாடி 138 ஓட்டங்களைக் குறித்தார். இதில் 4 ஆறு ஓட்டங்களும் 9 நான்கு ஓட்டங்களும் உள்ளடங்கும். அடுத்தபடியாக சுரேஸ் ரெய்னா 51 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.

அவுஸ்திரேலிய அணியின் மிச்சேல் ஸ்டார்க், அபாரமாக பந்து வீசி 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

268 என்ற வெற்றி இலக்கை அவுஸ்திரேலிய அணி, 49 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து அடைந்தது. ஆரோன் பின்ச், நிதானமாக துடுப்பாடி 96 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். அடுத்ததாக ஷேன் வட்சன் (41), ஸ்டீவன் ஸ்மித் (47) அதிரடியாக துடுப்பெடுத்தாடி ஆட்டமிழந்தனர். 

இந்திய அணியின் பந்துவீச்சாளர் உமேஸ் யாதேவ் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

போட்டியின் நாயகனாக அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சாளர் மிச்சேல் ஸ்டார்க் தெரிவுசெய்யப்பட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .