2026 ஏப்ரல் 06, திங்கட்கிழமை

தொடரை வெற்றிகொண்டது நியூஸிலாந்து

A.P.Mathan   / 2015 ஜனவரி 25 , மு.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை - நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான 6ஆவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் நியூஸிலாந்து அணி 120 ஓட்டங்களால் வெற்றிபெற்று, தொடரையும் கைப்பற்றியது.

நாணச் சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதற்கிணங்க, 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 315 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

நியூஸிலாந்து அணியின் கேன் வில்லியம்சன் 97 ஓட்டங்களுடனும் ரோஸ் டெய்லர் 96 ஓட்டங்களுடனும் துரதிழர்ஷ்டவசமாக ஆட்டமிழந்தனர்.

இலங்கை அணியின் பந்துவீச்சாளர்கள் சார்பில் தம்மிக்க பிரசாத் 2 விக்கெட்டுகளையும் ரங்கண ஹேரம், திஸ்ஸர பெரேரா மற்றும் திலகரட்ண டில்ஷான் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 40.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 195 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. அதிகபட்ச ஓட்டமாக குமார் சங்கக்கார 81 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

நியூஸிலாந்து அணியின் பந்து வீச்சாளரான குரே அன்டர்ஸன் 4 விக்கெட்டுகளையும் மிச்சல் மக்கிலனகன் 2 விக்கெட்டுகளையும் திரென்ட் போல் 1 விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

போட்டியின் நாயகனாக குரே அன்டர்ஸன் தெரிவுசெய்யப்பட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .