George / 2015 ஜனவரி 31 , மு.ப. 11:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேற்கிந்திய தீவுகள் அணியின் சகலதுறை ஆட்டவீரரான பிராவோ. டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
உலக கோப்பை போட்டிக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டதையடுத்து அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
2010 ஆம் ஆண்டில் இருந்து அவர் டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை. எனினும்; ஒரு நாள் போட்டியில் தொடர்ந்து விளையாடுவேன் என்று அவர் அறிவித்துள்ளார்.
40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பிராவோ, 3 சதம் அடங்களாக 2,200 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.
அவரது சராசரி ஓட்ட எண்ணிக்கை 31.42 ஆகும். 80 விக்கெடடுக்களையும் அவர் கைப்பற்றி உள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .