A.P.Mathan / 2015 மார்ச் 08 , பி.ப. 05:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் தலைவராக இரண்டாவது தடவையாக டேவ் கமரூன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் போட்டி இன்றி தெரிவு செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்புக்கள் இருந்த போதும், இறுதி நேரத்தில் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜோயல் கார்னர் - குறித்த பதவிக்கு போட்டியிடுவார் என பாபடோஸ் கிரிக்கெட் சம்மேளனம் அறிவித்தது.
அதன்படி நேற்று நடைபெற்ற தேர்தலில் 8 இற்கு 4 என்ற வித்தியாசத்தில் டேவ் கமரூன் வெற்றி பெற்றார். 2017ஆம் ஆண்டு வரை புதிய தலைவர் குறித்த பதவியில் இருப்பார். இவரின் தலைமையிலான நிர்வாகத்தில் பல சர்ச்சைகள் ஏற்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது. இவற்றில் இந்திய தொடரில் இருந்து மேற்கிந்திய தீவுகள் இடை நடுவே விலகியமை. உலகக் கிண்ண தொடரில் டரின் பிராவோ, கெரோன் போலார்ட் ஆகியோர் விலக்கப்பட்டமை. அவற்றிக்கு எதிராக க்றிஸ் கெயில் தனது கருத்துகளை வெளியிட்டு ஒழுக்காற்று விசாரணைக்கு அறிவிக்கப்பட்டமை என்பன முக்கிய விடயங்களாக கருதப்படுகின்றன.
16 minute ago
06 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
06 Apr 2026