2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

இந்திய பந்துவீச்சாளர்களுக்கு புகழாரம்

A.P.Mathan   / 2015 மார்ச் 08 , பி.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் உலகக் கிண்ண தொடரில் சிறப்பாக பந்து வீசி வருவதாக தென் ஆபிரிக்காவின் முன்னாள் வீரரும் உலகின் சிறந்த களத்தடுப்பாளருமான ஜொண்டி ரூட்ஸ் தெரிவித்துள்ளார். 

இந்திய அணி பலமான துடுப்பாட்ட அணி என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் அவுஸ்திரேலியா ஆடுகளங்களில் சிறப்பாக பந்துவீசுவார்கள் என யாரும் எதிர்பார்க்கவில்லை. அவார்கள் செயற்படும்விதம் ஆச்சரியமாக இருப்பதாக கூறியுள்ளார். வேகப்பந்து வீச்சாளர்கள் குறிப்பாக மொஹமட் ஷமி, மோஹித் ஷர்மா ஆகியோர் மிக சிறப்பாக பந்துவீசி வருகின்றனர். அத்துடன் சுழற்பந்துவீச்சாளர்கள் அவுஸ்திரேலியா ஆடுகளங்களில் சிறப்பாக பந்துவீசுவது கடினம். ஆனாலும் சிறப்பாக பந்துவீசுகின்றனர் என கூறியுள்ள ஜோண்டி ரூட்ஸ், இந்திய அணி சிறந்த சமநிலை அணியாக இருப்பதாக கூறியுள்ளார். 

ஜொண்டி ரூட்ஸ் இந்தக் கருத்துகளை கூறியுள்ள நிலையில், பாகிஸ்தான் முன்னாள் வேகப் பந்துவீச்சாளரும், ஐக்கிய அரபு ராட்சிய அணியின் பயிற்றுவிப்பாளருமான அக்கியூப் ஜாவிட், இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் மொஹமட் ஷமி - இந்திய அணியின் சிறந்த வேகப் பந்துவீச்சாளர் எனக் கூறியுள்ளார். இந்த உலகக் கிண்ண தொடரில் இந்திய அணி வெற்றிகளைப் பெற அவரின் சிறந்த பந்துவீச்சு முக்கிய காரணம் என ஜாவிட் மேலும் தெரிவித்துள்ளார். இந்திய அணிக்கு மொஹமட் ஷமி கிடைத்தது ஒரு கொடை எனக் கூறியுள்ள அக்கியூப் ஜாவிட், இளம் மோஹித் ஷர்மா தன்னை கவர்ந்துள்ளதாகவும், இந்திய அணியில் எதிர்காலத்தில் சிறந்த இடத்தை அவர் பிடிப்பார் என தான் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .