2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

அயர்லாந்தை வீழ்த்தி இந்தியா இலகுவெற்றி

George   / 2015 மார்ச் 10 , மு.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் 34ஆவது போட்டியில் 8 விக்கெட்டுக்களால் அயர்லாந்து அணியை வீழ்த்தி, இந்திய அணி வெற்றிப்பெற்றுள்ளது.

இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டி இன்று செவ்வாய்க்கிழமை(10) எமில்டனில் ஆரம்பமாகியது. 

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந்து அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. 

முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து, 49 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 259 ஓட்டங்களை பெற்றது.

260 ஓட்டங்களை இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 36.5 ஓவர்கள் நிறைவில் இரண்டு விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து, 260 ஓட்டங்களை பெற்று வெற்றியை சுவைத்தது.

இந்திய அணி சார்பாக சிறப்பாக துடுப்பெடுத்தாடிய தவான், 85 பந்துகளை எதிர்கொண்டு 11 நான்கு ஓட்டங்கள், 5 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக 100 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார்.

சர்மா  64 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க, விராத் கோலி 44 ஓட்டங்களுடனும் ரைனா 33 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .