A.P.Mathan / 2015 மார்ச் 11 , மு.ப. 08:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இருந்து முதற் சுற்றோடு வெளியேற, வீரர்களே காரணம் என இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் முகாமைத்துவப் பணிப்பாளர் போல் டோவ்ன்டன் தெரிவித்துள்ளார்.
வீரர்களே மைதானத்தில் விளையாடுகின்றனர். அவர்களே ஓட்டங்களைப் பெறவேண்டும், விக்கெட்களைக் கைப்பற்ற வேண்டும். எனவே, தோல்விக்கு முழுமையாக அவர்களே பொறுப்பு ஏற்கவேண்டும் என கூறி, இங்கிலாந்து அணியின் தோல்விக்கான பொறுப்புக் கூறலில் இருந்து தப்பித்துள்ளார்.
பயிற்றுவிப்பாளர் பீற்றர் மூர்ஸ், பதவியில் தொடர்வாரா இல்லையா என்பது இப்போது கூற முடியாது. அணியின் வீழ்ச்சிக்கான காரணங்களை கண்டறிய வேண்டும். அதற்கு இன்னும் சிறிது காலம் தேவை. ஆனாலும் மூர்ஸ் பதவியேற்று 10 மாதங்கள் மட்டுமே. உடனடியாக அவரால் அணியை உச்சத்துக்கு கொண்டு செல்ல முடியும் என்று கூற முடியாது. இந்தக் காலத்தின் சிறந்த பயிற்றுவிப்பாளர் எனக் கூறப்படுபவரை சிறிது காலத்துக்குள்ளேயே மாற்றுவது கடினம் எனவும் போல் டோவ்ன்டன் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கெவின் பீற்றர்சன் தொடர்பில் இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் முடிவில் எந்தவித மாற்றமும் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஆஷஸ் தோல்வியை தொடர்ந்து கெவின் பீற்றர்சன் அணியால் நீக்கப்பட்டமை, அன்று பிளவரின் தலைமையிலான பயிற்றுவிப்பாளர்கள் குழு விலகியமை போன்றனவும் அணி வீரர்களுக்குள் மாற்றங்கள் உருவாகியதும் தற்போதைய முகாமைத்துவப் பணிப்பாளர் போல் டோவ்ன்டனின் முகாமைத்துவத்தின் கீழ் என்பது குறிப்பிடத்தக்கது.
11 minute ago
18 minute ago
19 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
18 minute ago
19 minute ago
35 minute ago