A.P.Mathan / 2015 மார்ச் 14 , பி.ப. 01:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேசக் கிரிக்கெட் பேரவையின் தடைக்குட்பட்ட பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர் மொஹமட் ஆமீர், மீண்டும் முதற் தர போட்டிகளில் பந்துவீச ஆரம்பித்துள்ளார். 4 1/2 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் பந்துவீசிய ஆமீர், 16 ஓவர்கள் பந்துவீசி 3 விக்கெட்களைக் நேற்று (23) கைப்பற்றினார். இதில் 2 விக்கெட்களை அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தினார்.
ராவல்பிண்டி அணிக்காக விளையாடும் மொஹமட் ஆமீர், நான்கு தினங்களுக்கு முன்னர் பாகிஸ்தான் ஆர்மி அணியுடன் மீள கிரிக்கெட் போட்டிகளை ஆரம்பிக்க இருந்த போதும் மழை காரணமாக குறித்த போட்டி கைவிடப்பட்டது. இவர் இறுதியாக ஓகஸ்ட் மாதம் 2010ஆம் ஆண்டு இங்கிலாந்து லோர்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்களை கைப்பற்றி இருந்தார். அந்த போட்டியினை தொடர்ந்தே சூதாட்ட பிரச்சினை வெளியே வந்து அணியால் உடனடியாக ஆமீர் உட்பட இன்னும் 2 வீரர்கள் அணியால் நீக்கப்பட்டு விசாரணைகளின் பின்னர் சர்வதேசக் கிரிக்கெட் பேரவையினால் தடை செய்யப்பட்டனர்.
செப்டெம்பர் மாதம் 5 வருட தடை நிறைவடையும் நிலையில், உள்ளூர் போட்டிகளில் விளையாட அமீருக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி அவர் உள்ளூர்ப் போட்டிகளில் மீண்டும் விளையாட ஆரம்பித்துள்ளார்.
ஏராளனமான ஊடகவியளாளர்கள் அவரின் பந்துவீச்சை பதிவு செய்ய அங்கே சென்று இருந்தனர். அவர்களின் கருத்துகளின் படி அவருடைய பந்துவீச்சு மற்றும் உடற்தகுதி என்பன மாறவில்லை. இன்னும் சிறப்பாக அமைந்துள்ளது. ஆனால் அவரின் தலைமுடி மற்றும் முக தோற்றம் என்பனவற்றில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார் என தெரிவித்துள்ளனர். நீண்ட தலைமுடியை வெட்டி, கண்ணியமான குறுகிய நன் நடத்தை உள்ளவர் போன்று மாற்றியுள்ளதாகவும், குறைக்கப்பட்ட தாடியை வைத்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
மோசமான நிலையில் இருந்து தான் வெளியே வந்துள்ளதாகவும், மீண்டும் பூஜ்ஜியத்தில் இருந்து தான் அனைத்தையும் ஆரம்பிப்பதாவும் தெரிவித்துள்ள ஆமீர், முதல் பந்தை வீசும் போதும் என்னால் மீண்டும் முடியும் என்ற நம்பிகையோடு பந்து வீச ஆரம்பித்தேன் எனக் கூறியுள்ளார்.
அவருடைய வழமையான பந்துவீச்சு பாணி இருந்த அதேவேளை மணிக்கு 140 கிலோ மீற்றர் வேகம் என்ற வேகத்திற்கு மேலாக பந்துவீசிய அதேவேளை, பௌன்சர் பந்துகள், ஸ்விங் பந்துகள் போன்றனவற்றை வீசி இருந்தார்.
22 minute ago
06 Apr 2026
mohammad shafi Wednesday, 18 March 2015 04:43 AM
Mash Allah
Reply : 0 0
mohammad shafi Wednesday, 18 March 2015 04:43 AM
Mash Allah
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
06 Apr 2026