Thipaan / 2015 மார்ச் 15 , பி.ப. 01:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகக்கிண்ண போட்டித் தொடரின் முதல் சுற்றான குழு நிலைப் போட்டிகள் இன்று நிறைவடைந்துள்ளன. இன்றைய போட்டிகளின் படி குழு Bயிலிருந்து மேற்கிந்திய தீவுகள் மற்றும் பாகிஸ்தான் அணிகள் காலிறுதி போட்டிக்கு தெரிவாகியுள்ளன.
முதல் காலிறுதிப் போட்டி
முதலவாது காலிறுதி போட்டி குழு A இல் மூன்றாமிடத்தைப் பெற்ற இலங்கை அணிக்கும் குழு B இல் இரண்டாமிடத்தைப் பெற்ற தென் ஆபிரிக்கா அணிக்குமிடையில் அவுஸ்திரேலியாவின் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் 18ஆம் திகதி புதன்கிழமை இலங்கை நேரப்படி காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது.
இரண்டாவது காலிறுதிப் போட்டி
இரண்டாவது காலிறுதிப் போட்டி குழு B இல் முதலாமிடத்தைப் பெற்ற இந்திய அணிக்கும், குழு A இல் நான்காமிடத்தைப் பெற்ற பங்களாதேஷ் அணிகளுக்குமிடையில் அவுஸ்திரேலியா மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்தில் 19ஆம் திகதி வியாழக்கிழமை இலங்கை நேரப்படி காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது.
மூன்றாவது காலிறுதிப் போட்டி
மூன்றாவது காலிறுதிப் போட்டி குழு Aஇல் இரண்டாமிடத்தைப் பெற்ற அவுஸ்திரேலியா அணிக்கும், குழு B இல் மூன்றாமிடத்தைப் பெற்ற பாகிஸ்தான் அணிகளுக்குமிடையில் அவுஸ்திரேலியா அடிலைட் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை இலங்கை நேரப்படி காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது.
நான்காவது காலிறுதிப் போட்டி
நான்காவது காலிறுதிப் போட்டி குழு A இல் முதலாமிடத்தைப் பெற்ற நியூசிலாந்து அணிக்கும், குழு B இல் நான்காமிடத்தைப் பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்குமிடையில் நியூசிலாந்து வெலிங்டன் வேஷ்ட்பக் கிரிக்கெட் மைதானத்தில் 21ஆம் திகதி சனிக்கிழமை இலங்கை நேரப்படி காலை 6.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
அரை இறுதிப் போட்டிகள்
நான்காவது காலிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணியும் முதல் காலிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணியும் ஒரு அரை இறுதிப் போட்டியிலும் விளையாடவுள்ளன.
அதேவேளை, இரண்டாவது மற்றும் மூன்றாவது காலிறுதிப் போட்டிகளில் வெற்றி பெறும் அணிகள் இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளன.
அரை இறுதிப் போட்டிகளுக்கு அவுஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் தெரிவாகினால் அந்தந்த நாடுகளில் இரு அணிகளும் விளையாடும் என்பது குறிப்பிடத்தக்கது.
10 minute ago
21 minute ago
32 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
21 minute ago
32 minute ago
45 minute ago