A.P.Mathan / 2015 மார்ச் 20 , மு.ப. 10:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் இன்று இடம்பெற்ற உலகக்கிண்ண 3ஆவது காலிறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது.
அடலெய்ட் ஓவல் மைதானத்தில் இன்று காலை ஆரம்பமான போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 49.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 213 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.
214 என்ற வெற்றியிலக்கினை துரத்திய அவுஸ்திரேலிய அணி, 33.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து பெற்றுக்கொண்டது.
இன்றைய போட்டியின் நாயகனாக, அவுஸ்திரேலிய அணி சார்பில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜோஸ் காஸ்லிவூட் தெரிவுசெய்யப்பட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .