2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் இடைக்கால நிர்வாக சபை நியமிப்பு

Thipaan   / 2015 ஏப்ரல் 01 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் இடைக்கால நிர்வாக சபை, சுற்றுலா மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் நவீன் திஸ்ஸநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணியின் முன்னாள் வீரர் சித்தார்த் வெத்திமுனி இடைக்கால நிர்வாக சபையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரகாஷ் ஷாப்டர் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள அதேவேளை, குஷில் குணசேகர உப தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

லுசிலி விஜயவர்த்தன பொருளாளராகவும், கபில விஜயகுணவர்த்தன உபதலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.  

ஏற்கெனவே இருந்த நிர்வாக சபையில் பொருளாளராக இருந்த நுஸ்கி மொஹமட் மற்றும் உறுப்பினராக இருந்த ஜெயானந்த வர்ணவீர ஆகியோர் நிர்வாக சபை உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.  

அத்துடன் ஜனாதிபதி சபையின் துமிந்த குழன்கமுவ, பிரசன்ன ஜெயவர்தன ஆகியோர் நிர்வாக சபை உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

நேற்றுடன் தற்போது உள்ள நிர்வாக சபையின் பதவிக்காலம் நிறைவடைகின்றது. உலகக்கிண்ண தொடர் காரணமாக தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் விளையாட்டுத்துறை அமைச்சர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

இடைக்கால நிர்வாக சபையின் காலம் பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை. மறு அறிவித்தல் வரை இந்த இடைக்கால நிர்வாக சபை நிர்வாகத்தில் இருக்கும் என நம்பப்படுகின்றது.

இன்று முதல் புதிய இடைக்கால நிர்வாக சபை பதவி ஏற்கவுள்ள நிலையில், விளையாட்டு துறை அமைச்சர் நவீன் திஸ்ஸநாயக்க, இன்று (01) பிற்பகல்  2 மணிக்கு இடைக்கால நிர்வாக சபை தொடர்பான ஊடகவியலாளர் மாநாடு ஒன்றிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .