2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

மீண்டும் கிரிக்கெட் களத்தில் அஜ்மல்

A.P.Mathan   / 2015 ஏப்ரல் 04 , மு.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

சைட் அஜ்மல், மீண்டும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் இணைந்து விளையாடவுள்ளார். விதிமுறைகளை தாண்டி பந்துவீசியதால் சர்வதேசக் கிரிக்கெட் சபையினால் அவர் தடை செய்யப்பட்டார். தன்னுடையை பந்துவீச்சு பாணியை மாற்றி மீண்டும் விதிமுறைகளுக்கு அமைவாக சைட் அஜ்மல் பந்துவீசுவதனால் மீண்டும் அவர் பந்துவீச அனுமதி வழங்கியது. இந்த நிலையில் பங்களாதேஷ் தொடரில் விளையாட மீண்டும் அணியில் இணைக்கப்பட்டுள்ளார். 37 வயதான அஜ்மல், மூன்றுவித கிரிக்கெட் போட்டிகளிலும் இணைக்கப்பட்டுள்ளார். 

ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள மிஸ்பா உல் ஹக், சஹிட் அப்ரிடி ஆகியோர் அணியில் இருந்து விலகியுள்ளனர். யூனுஸ் கானுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. மோசமான உலகக்கிண்ண தொடரை அடுத்து உமர் அக்மல் மூன்று வித போட்டிகளிலும் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். நசிர் ஜெம்ஷெட், அஹமட் ஷெஷாட் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். 

உபாதை காரணமாக உலகக்கிண்ண அணியில் இடத்தை இழந்து மொஹமட் ஹபீஸ் மீண்டும் அணியில் இணைந்துள்ளார். விதிமுறைகளை மீறி பந்துவீசுகின்ற காரணத்தினால் தனியே துடுப்பாட்ட வீரராக ஹபிஸ் அணியில் இணைந்துள்ளார். ஏப்ரல் 10ஆம் திகதி நடைபெறவுள்ள சோதனையில் வெற்றியடைந்தால் அவர் மீண்டும் பந்துவீச முடியும். ஆஷர் அலி தலைவராக அணிக்குள் இடத்தைப் பிடித்துள்ளார். ஆஸாட் ஷபீக், பவாட் அலாம், மொஹமட் ரிஸ்வான், சமி அஸ்லம் ஆகியோர் அணிக்குள் இடம் பிடித்துள்ளனர்.

டெஸ்ட் போட்டிகளில் இருந்து எஷான் ஆதில், இம்ரான் கான், மொஹமட் தல்ஹா, ஷான் மசூட், தௌபீக் உமர் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டு, பாபர் அசாம், சமி அஸ்லம், சைட் அஜ்மல், சொஹைல் கான், உலகக்கிண்ணத்தில் சிறப்பாக பந்துவீசிய வஹாப் ரியாஸ், சொஹைல் கான் ஆகியோர் அணியில் மீண்டும் இடம் பிடித்துள்ளனர். 

ஒரு நாள் சர்வதேசப் போட்டி அணி 
ஆஷர் அலி (தலைவர்), மொஹமட் ஹபீஸ், ஆஸாட் ஷபீக், பவாட் அலாம், மொஹமட் ரிஸ்வான், சமி அஸ்லம், சைட் அஜ்மல், சப்ராஸ் அஹமட், ஹரிஸ் சொஹைல், சொஹைப் மக்சூட், யசீர் ஷா, வஹாப் ரியாஸ், ரஹாத் அலி, எஷான் ஆதில், சொஹைல் கான்.

டெஸ்ட் அணி 
மிஸ்பா உல் ஹக், யூனுஸ் கான், ஆஷர் அலி, மொஹமட் ஹபீஸ், ஆஸாட் ஷபீக், சமி அஸ்லம், சைட் அஜ்மல், சப்ராஸ் அஹமட், ஹரிஸ் சொஹைல், யசீர் ஷா, வஹாப் ரியாஸ், ரஹாத் அலி, சொஹைல் கான், ஜுனைட் கான், சுல்பிகார் பாபர், பாபர் அசாம்.

20-20 அணி 
சஹிட் அப்ரிடி, அஹமட் செஷாட், மொஹமட் ஹபீஸ், மொஹமட் ரிஸ்வான், சமி அஸ்லம், சைட் அஜ்மல், சப்ராஸ் அஹமட், ஹரிஸ் சொஹைல், சொஹைப் மக்சூட், வஹாப் ரியாஸ், முக்தர் அஹமட், சொஹைல் தன்வீர், சாட் நசீம், உமர் குள், ஜுனைட் கான், சொஹைல் கான்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .