A.P.Mathan / 2015 ஏப்ரல் 05 , பி.ப. 01:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
பங்களாதேஷ் கிரிக்கெட் சபை, தமது நாட்டில் இந்த வருட இறுதியில் நான்கு நாடுகள் பங்குபற்றும் ஒருநாள் சர்வதேசக் கிரிக்கெட் போட்டித் தொடர் ஒன்றை நடாத்த திட்டமிட்டுள்ளதாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் தலைவர் நஸ்முள் ஹசன் தெரிவித்துள்ளார்.
மேற்கிந்திய தீவுகள் இந்த தொடரில் பங்குபற்ற ஆர்வமாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் பாகிஸ்தான் மற்றும் சிம்பாவே அணிகள் இந்த தொடரில் பங்குபற்ற வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மற்றைய அணிகளின் போட்டி அட்டவணைகளின் படி இந்த தொடர் நடைபெறும் நேர அட்டவணை தயார் செய்யப்படவுள்ளது.
2019ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை குறி வைத்து பங்களாதேஷ் அணியை மேலும் வளர்க்கும் நோக்கில் முன்னணி அணிகளுடன் பங்களாதேஷ் அணி ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாட தீர்மானித்துள்ளது.
40 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
51 minute ago