A.P.Mathan / 2015 ஏப்ரல் 07 , மு.ப. 10:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தானின் மத்தியகள துடுப்பாட்டவீரரான ஷொய்ப் மஷூட், இடது கையின் மணிக்கட்டில் ஏற்பட்டுள்ள என்புமுறிவு காரணமாக பங்களாதேஷ் தொடரின் ஒருநாள், 20-20 அணிகளிருந்து விலகியுள்ளார். இவருக்கு பதிலாக 20-20 அணியில் இடம்பெற்றிருக்கும் சயிட் நஸீம் ஒருநாள் அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.
லாகூரில் இன்று நடைபெற்ற ஜிம், உடற்தகுதி பயிற்சிகளின் போதே நோவை உணர்ந்தபோதே பின் ஸ்கான் பரிசோதனைகளின்போதே என்புமுறிவு கண்டுபிடிக்கப்பட்டது. கடந்தவருடமும் பாகிஸ்தான் ஏ அணிக்காக ஆடும்போது இதே உபாதையினால் பாதிக்கப்பட்டு நியூசிலாந்துக்கு எதிரான போட்டித்தொடரில் இடம்பெறாமல் போனார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .