A.P.Mathan / 2015 ஏப்ரல் 10 , மு.ப. 10:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்ரேலிய அணியின் முன்னாள் கப்டனும் ஊடகவியலாளரும், பிரபலமான கிரிக்கெட் வர்ணனையாளருமான ரிச்சி பேனார்ட், தனது 84ஆவது வயதில் சிட்னியில் காலமானார். இவர் தனது வாழ்நாளின் பெரும்பகுதியை தோல் புற்றுநோயுடனான போராட்டத்தில் கழித்துள்ளார். மேலும் 2013ஆம் ஆண்டு தனது வீட்டுக்கு அருகில் நடந்த மோசமான கார் விபத்தொன்றில் சிக்கியதால் அதனை தொடர்ந்ததான நோய்களால் பாதிக்கப்பட்டு இருந்தார்.
சிறந்த ஒரு லெக்ஸ்பின்னரும், அதிரடியாக அடித்து ஆடக்கூடியவருமான ரிச்சி பேனார்ட், தான் 1964ஆம் ஆண்டு ஓய்வு பெறும்போது பெற்ற 248 டெஸ்ட் விக்கெட்களே அந்நேரம் அவுஸ்ரேலிய பந்துவீச்சாளர் ஒருவரினால் டெஸ்ட் போட்டிகளில் பெறப்பட்ட அதிகூடிய விக்கெட்களாக இருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் தான் கப்டனாக பதவிவகித்த காலப்பகுதியில் ரிச்சி பேனார்ட் எந்தவொரு தொடரிலும் தோல்வியடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய கிரிக்கெட் உலகுக்கு கிரிக்கெட் வர்ணனையாளருமான ரிச்சி பேனார்ட், அவுஸ்ரேலியாவின் பிரபல கிரிக்கெட் ஊடகமாக கருத்தப்படும் சேனல் ஒன்பதின் வர்ணனையாளராக 1977ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை 38 வருடங்களாக பணிபுரிந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .