George / 2015 ஏப்ரல் 27 , பி.ப. 12:47 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்தின் பிராந்திய அணியான செல்சியாவின் முன்கள வீரரும், பெல்ஜியம் அணியின் முன்கள வீரருமான 24 வயதான ஈடின் ஹசார்ட் இங்கிலாந்து தொழில்முறை கால்பந்தாட்ட வீரர்களின் கூட்டமைப்பின் இவ்வருட சிறந்த வீரருக்கான விருதைப்பெற்றுள்ளார்.
2010ஆம் ஆண்டுக்கு பின்னர், பிரீமியர் லீக் பட்டம் வென்றுள்ள செல்சியா அணிக்காக, 33 பிரீமியர் லீக் போட்டிகளில் பங்கேற்றுள்ள ஹசார்ட், 13 கோல்களை பெற்றுள்ளதுடன் 8 கோல்கள் பெறுவதற்கு உதவிபுரிந்துள்ளார்.
இதேவேளை, இங்கிலாந்து தொழில்முறை கால்பந்தாட்ட வீரர்களின் கூட்டமைப்பின் இவ்வருடத்துக்கான சிறந்த இளம் கால்பந்தாட்ட வீரர் விருதை டொட்டேன்காம் அணியின் 21 வயதான ஹரி கேன் பெற்றுள்ளதுடன் சிறந்த கால்பந்தாட்ட வீராங்கனைக்கான விருதை, செல்சியா அணியின் ஜி சோ யுங்க் பெற்றுள்ளார்.
இளம் வீரருக்கான விருதை வென்ற ஹசார்ட், லண்டன் குரோஸ்வேனர் ஹோட்டலில் வைத்து ஞாயிற்றுக்கிழமை(26), விருதை பெற்றபின் கருத்து nதிவிக்கையில், தான் மிகுந்த மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தான் ஒருநாள் சிறந்த வீரராக வரவிரும்பியதாகவும் குறிப்பிட்டார்.
அத்துடன், தான் இம்முறை சிறப்பாக விளையாடியதாகவும் செல்சியா அணி இம்முறை சிறப்பாக விளையாடியதாகவும் குறிப்பிட்டதுடன் தான் இவ்விருதுக்கு தகுதியானவரா என்று தெரியாது என்றும் கூறினார்.
39 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
50 minute ago