A.P.Mathan / 2015 மே 17 , பி.ப. 01:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலியா ஒருநாள் சர்வதேச அணியின் உபதலைவர் பிரட் ஹடின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். ஏற்கெனவே உலகக்கிண்ண தொடர் நிறைவடைந்த பின்னர் தான் ஓய்வு பெறுவதாக அறிவித்து இருந்தபோதும் தற்போது உத்தியோகபூர்வ அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடருக்கு இன்று பயணமாகவுள்ள நிலையில் தன் ஓய்வு அறிவித்தலை கடின் வெளியிட்டுள்ளார்.
மூன்று உலகக்கிண்ண தொடர்களில் விளையாடிய பின் உலகக்கிண்ணத்தை வென்று அணியை விட்டு விலகியது தனக்கு பெருமை தருவதாக கூறியுள்ளார்.
ஹடின், 126 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடி 3,122 ஓட்டங்களை 31.53 என்ற சராசரியில் 2 சத்தங்கள், 16 அரைச்சதங்கள் அடங்கலாக பெற்றுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .