2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

இந்திய கிரிக்கெட் ஆலோசனைக் குழுவில் சச்சின், கங்குலி, லக்ஷ்மன்

A.P.Mathan   / 2015 ஜூன் 02 , பி.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் ஆலோசனைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் இந்திய முன்னாள் வீரர்களான சச்சின் டென்டுல்கார், சௌரவ் கங்குலி, வெங்கிப்பிரபு லக்ஷ்மன் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.  

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் செயலாளர் அனுராக் தாகூர் இதனை அறிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் தெரிவு அடங்கலாக முக்கிய முடிவுகளில் இவர்களின் ஆலோசனைகள் முக்கிய இடம் பிடிக்கவுள்ளன. இவர்களின் உடனடி செயற்பாடாக அணிக்கு தலைமைப் பயிற்றுவிப்பாளரை அல்லது பணிப்பாளரை நியமிப்பது தொடரிபில் முடிவு எடுத்து அதற்கான சரியானவரை சிபார்சு செய்ய வேண்டும். 

இந்தக் குழுவினதும், இந்தக் குழுவில் தனது பணி என்ன என்பதுவும் தனக்கு இன்னமும் தெரியாது. ஆனால் சச்சின், லக்ஷ்மன் ஆகியோருடன் இணைந்து செயற்படுவது சந்தோஷம் என சௌரவ் கங்குலி கூறியுள்ளார். 

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் ஆலோசனைக்குழுவில் இடம் பிடித்தது தனக்கு பெருமை எனவும், தன்னுடைய சேவையை இந்திய கிரிக்கெட் அணிக்கு வழங்க தயாராக இருப்பதாக லக்ஷ்மன் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .