2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

மூன்றாமிடத்தில் ஸ்மித்

A.P.Mathan   / 2015 ஜூன் 03 , பி.ப. 01:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியா அணியின் உப தலைவர் ஸ்டீபன் ஸ்மித் இன்று ஆரம்பிக்கவுள்ள மேற்கிந்திய தீவுகள் அணியுடனான டெஸ்ட் போட்டியில் மூன்றாமிடத்தில் துடுப்பாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியா அணித் தலைவர் இதனை உறுதி செய்துள்ளார். 

இந்திய அணியுடனான தொடரிலும், உலகக்கிண்ணத் தொடரிலும் ஸ்மித் மூன்றாமிடத்தில் களமிறங்கி அதிக ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். ஷோன் மார்ஸ் மூன்றாமிலக்க வீரராக களமிறங்க திட்டம் இருந்த போதும் க்றிஸ் ரொஜர்ஸ் உபாதையடைந்ததை தொடர்ந்து மார்ஸ் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கவுள்ளார். 

தான் ஏற்கனவே இது தொடர்பாக ஸ்மித் உடன் பேசியுள்ளதாகவும் நீண்ட நாட்களாக அவரை மூன்றாமிலக்கத்தில் களமிறக்கும் திட்டம் இருந்ததாகவும் அணித் தலைவர் ஸ்மித் மேலும் கூறியுள்ளார். 

இன்றைய போட்டியில் அடம் வோஜஸ் அல்லது பவாட் அஹமட் ஆகியோரில் ஒருவர் டெஸ்ட் அறிமுகத்தை மேற்கொள்ளவுள்ளனர். 

2011ஆம் ஆண்டு ரிக்கி பொன்டிங் ஓய்வு பெற்ற பின்னர் அவுஸ்திரேலியா அணியில் யாரும் இன்னமும் சரியான முறையில் மூன்றாமிடத்தை மீள் நிரப்புகை செய்யவில்லை. மூன்றாமிடம் டேவிட் பூன் காலத்தில் இருந்து மூன்றாமிடம் அவுஸ்திரேலியா அணிக்கு பிரச்சினையாக இருக்கவில்லை. 2011ஆம் ஆண்டு முதல் மைக்கல் கிளார்க், ஷோன் மார்ஸ், உஸ்மான் கஜாவா, ரொப் குயினி, பிலிப் கியூஸ், ஷேன் வொட்சன், எட் கோவன், அலெக்ஸ் டூலான், கிளன் மக்ஸ்வெல் ஆகியோர் குறித்த இடத்தில் விளையாடிய போதும் யாரும் சரியான இடத்தைப் பிடிக்கவில்லை. ஆனால் ஸ்டீபன் ஸ்மித் அண்மைக்காலமாக காட்டிவரும் அபார திறைமை அவரை மூன்றாமிடத்தில் நிலை நிறுத்தும் என நம்பலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .