2026 ஏப்ரல் 06, திங்கட்கிழமை

கால்பந்தாட்ட சம்மேளன தலைவர் ராஜினாமா

A.P.Mathan   / 2015 ஜூன் 02 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் செப் பிளாட்டர், தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். ஐந்தாவது தடவையாக பதவியேற்று மறு நாளே குறித்து பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மிக மோசமான ஊழல்கள் சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தில் நடைபெற்றுள்ளதாக பலர் கடந்த வாரம் கைதாகியுள்ள நிலையில் அதனைக் காரணம் காட்டி செப் பிளாட்டர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 

சுவிட்சர்லாந்தை சேர்ந்த செப் பிளாட்டர், 1998ஆம் ஆண்டு முதல் சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவராக கடமையாற்றியுள்ளார். 1981ஆம் ஆண்டு முதல் சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தில் பிளாட்டர் கடமையாற்றியுள்ளார். 79 வயதான பிளாட்டர், சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் எட்டாவது தலைவர் ஆவர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .