2026 ஏப்ரல் 06, திங்கட்கிழமை

ஆலோசகராக மஹேல ஜெயவர்தன

Gopikrishna Kanagalingam   / 2015 ஓகஸ்ட் 05 , பி.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட ஆலோசகராக, மஹேல ஜெயவர்தன இணைந்துகொள்ளவுள்ளார். பாகிஸ்தான் அணியுடனான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் செல்லவுள்ள இங்கிலாந்தின் பயிற்சியாளர் குழாமில் அவர் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


ஆசிய ஆடுகளங்களில் அவரின் நிபுணத்துவமே, இத்தொடருக்காக அவர் தெரிவுசெய்யப்படுவதில் அதிக தாக்கத்தைச் செலுத்தியதாகத் தெரிகிறது. இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் பயிற்சியாளர் குழாமில் முழு நேரமாக பணியாற்றாது, சுழற்பந்துவீச்சு ஆலோசகராக முஷ்டாக் அகமட் பணியாற்றியது போன்று, குறுகிய கால ஒப்பந்த அடிப்படையிலேயே மஹேல செயற்படுவார் என்று கூறப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .